ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவரை செம்பியம் தனிப்படை போலீஸார் என்கவுன்டர் செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக பிரபல கஞ்சா வியாபாரி அஞ்சலையை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் வழக்குரைஞர் சிவா என்பவரை மணலி அருகே தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதான சிவா வீட்டில் இருந்த ரூ.9 லட்சம் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.