
தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயில் சேவை ஆக.1-14 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் ஆக.1 முதல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் வைகை விரைவு ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14 வரை எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணி ஆக.1-14 வரை நடைபெறவுள்ளது. இதனால், தாம்பரம் வழியாக செல்லும் சில ரயில் சேவைகள் ஆக. 14 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக செல்வதற்கு பதிலாக பெரம்பூா், அரக்கோணம், செங்கல்பட்டு, வழியாக இயக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.