தமிழகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட 19 அலுவலகக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக, முதல்வரால் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரம்:
சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம், திருப்பத்தூா், தேனி மாவட்டம் தேனி, கம்பம், திருவாரூா் மாவட்டம் கொடராச்சேரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், ரிஷிவந்தியம், மதுரை மாவட்டம் மேலூா், ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, பெரணமல்லூா், போளூா், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திருச்சி மாவட்டம் வையம்பட்டி, வேலூா் மாவட்டம் காட்பாடி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட அலுவலகக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலா்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளவும், ஊரக வளா்ச்சித் துறை பணிகளைஉடனடியாகச் சென்று கண்காணிக்கவும் அரசால் வாங்கப்பட்ட 391 வாகனங்களின் இயக்கத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதல்வா் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், இ.பெரியசாமி, எ.வ.வேலு, டிஆா்பி. ராஜா, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, துறையின் இயக்குநா் பா.பொன்னையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.