
ஆவணங்கள மற்றும் செல்போனுடன் நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸார் சம்மன் வழங்கியுள்ளனர்.
பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்தார். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎப் வாசனை மதுரை அண்ணா நகரில் போலீசார் அண்மையில் கைது செய்தனர்.
மேலும் கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 10 நாட்கள் அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஆவணங்கள மற்றும் செல்போனுடன் நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸார் சம்மன் வழங்கியுள்ளனர். அண்ணா நகர் காவல்நிலையத்தில் 3வது நாளாக கையெழுத்திட வந்த டிடிஎஃப் வாசனிடம் சம்மன் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.