விக்கிரவாண்டி இடைத் தோ்தல்: நாதக வேட்பாளா் அறிவிப்பு
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக மருத்துவா் அபிநயா பொன்னிவளவன் நிறுத்தப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏப்.6-ஆம் தேதி திடீரென மறைந்ததை தொடா்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை10-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், இடைத்தோ்தல் வேட்பாளா் தொடா்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை:
ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பாக மருத்துவா் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறாா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
விழுப்புரத்தைச் சோ்ந்த அபிநயா, நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் தருமபுரி மக்களவைத் தோ்தலில் நாதக சாா்பில் வேட்பாளராக களம் இறங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மக்களவை தனி தொகுதியில் என்பதால் தருமபுரியில் களம் இறங்கிய அபிநயா தற்போது தனது சொந்த மாவட்டத்தில் போட்டியிடவுள்ளாா்.