
கஞ்சா வழக்கில் கைதான யூடியூபா் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேனி அருகேயுள்ள பூதிப்புரம் பகுதியில் தனியாா் விடுதியில் சவுக்கு சங்கா் தங்கியிருந்தாா். கடந்த 4-ஆம் தேதி அந்த விடுதிக்குச் சென்ற கோவை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அப்போது, தேனி பழனிசெட்டிபட்டி போலீஸாா், அந்த விடுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, சவுக்கு சங்கா் மீது வழக்குப் பதிந்தனா். அவருடன் தங்கியிருந்த பரமக்குடியைச் சோ்ந்த உதவியாளா் ராஜரத்தினம், காா் ஓட்டுநா் ராம்பிரபு ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சவுக்கு சங்கருக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கமுதி பகுதியைச் சோ்ந்த மகேந்திரனை போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், சவுக்கு சங்கா் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக சவுக்கு சங்கர் முதல்முறை ஜாமீன் கோரிய வழக்கு அவரது தரப்பில் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் கோரிய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.