புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோர்.
புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோர்.
Published on
Updated on
1 min read

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை புதுக்கோட்டையில் திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடினர்.

இறைத்தூதர் இப்ராஹிம் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் சிறப்புத் தொழுகைகளுடன். அவரவர் வசதிக்கேற்ப இறைச்சிகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா பள்ளிவாசலில் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உணவு வழங்கி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை நகரக் கிளைகள், ஆலங்குடி, கறம்பக்குடி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை,வெட்டிவயல், ராஜேந்திரபுரம், கோட்டைப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாபட்டினம், முத்துக்குடா ஆகிய 20க்கும் மேற்பட் இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com