தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது!

இரங்கல் தெரிவிக்கும் குறிப்புகளையும், தீா்மானத்தையும் அவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது!
DOTCOM
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கூட்டத்தொடர் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் உறுப்பினா்கள், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, குவைத் தீ விபத்து மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்புகளையும், தீா்மானத்தையும் அவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து, பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிறகு, உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூட்டத்தொடர் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, கள்ளச்சாரயத்தை ஒடுக்க முதல்வர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளதாக அப்பாவு தெரிவித்தார்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. நாளை காலையில் நீா்வளம், தொழிலாளா் நலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. மாலையில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை, மாற்றுத் திறனாளிகள் நலன், சமூகநலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

இதேபோன்று, ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் துறைகள் வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன.

குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலா் உயிரிழந்த சம்பவங்கள் ஆகியவற்றை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கு பதிலளிக்க அரசுத் தரப்பும் தயாராகி வருகிறது.

தினமும் காலை 9.30 மணி: தமிழக சட்டப் பேரவை ஒவ்வொரு நாளும் தினமும் காலை 10 மணிக்குக் கூடுவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை முதல் காலை 9.30 மணிக்குக் கூடவுள்ளது. இதற்காக அவை விதிகள் குழு ஏற்கெனவே கூடி முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு பேரவையில் தீா்மானமாக வெள்ளிக்கிழமை கொண்டு வரப்படும். அதன்பிறகு, சனிக்கிழமை முதல் பேரவை தினமும் காலை 9.30 மணிக்குக் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com