
சென்னை: சென்னை, நீலாங்கரையில், நடிகர் மற்றும் தவெகா தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாகச நிகழ்ச்சியில், சிறுவனின் கையில் தீ பற்றி விபரீதம் நேரிட்டுள்ளது.
நீலாங்கரையில் தவெகா மாவட்ட த் தலைவர் சரவணன் தலைமையில், விஜய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, தீ எரிந்தபடி, அந்த சிறுவன் கையால் ஓடு உடைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
மேடையில், ஓடுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, சிறுவன் ஓடுகளை உடைத்த போது, கையில் பற்றி எரிந்த தீ அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தது.
இதில், சிறுவன் வலியால் துடிக்க, அப்போது அருகில் இருந்த நபர், தண்ணீர் என நினைத்து, பெட்ரோல் கேனை எடுத்து சிறுவன் கையில் ஊற்றினார். இதனால், தீ மேலும் பற்றி எரிந்தது. இதனால், அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, மற்றவர்கள் தீயை அணைத்து, சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்வில், சாகச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தீயை அணைக்க எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.