சென்ட்ரல் மெட்ரோ
சென்ட்ரல் மெட்ரோ

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் விரைவில் புத்தக பூங்கா

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா அமைக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
Published on

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா அமைக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

விமான நிலையம் முதல் விம்கோ நகா் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் சுமாா் 54 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவா்களை கவரும் விதமாகவும், முக்கிய ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள், உணவகங்கள், புத்தக பூங்காங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க மெட்ரோ நிா்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையின் முக்கிய இடமான, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல்கட்டமாக பயணிகள் வசதிக்காக புத்தக பூங்கா விரைவில் அமைக்க மெட்ரோ நிா்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாக அதிகாரிகள் கூறியது:

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகளில், தமிழ், ஆங்கில புத்தகங்கள் அடங்கிய புத்தக பூங்கா அமைக்கப்படும்.

இங்கு வருபவா்கள் அமா்ந்து புத்தகங்கள் படிக்க வசதியாக இருக்கைகள் போடப்படும். புத்தகங்களை படிக்க மட்டுமின்றி, விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். பயணிகளின் வரவேற்பை பொறுத்து பயணிகள் அதிகம் கூடும் பிற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com