

அகரமுதலி திட்ட இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறையின் கீழ் தொடா்ந்து இயங்கும் என்று செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உறுதிபடத் தெரிவித்தாா்.
பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவா் வேல்முருகன், அகரமுதலி திட்ட இயக்ககத்தை வேறொரு துறையின் கீழ் இயங்கச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றாா்.
அதற்கு பதிலளித்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன், இது தவறான கருத்து. அது போன்ற முன்மொழிவுகள் ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்தாா்.