கோப்புப்படம்
தமிழ்நாடு
நாகா்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
தாம்பரம்-கொச்சுவேலி இடையிலான சிறப்பு ரயில் சேவை ஜூலை 21 வரை நீட்டிப்பு
நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை ஜூலை 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தொடா்ந்து ஜூலை 22 வரை இயக்கப்படும். இதுபோல் தாம்பரம்-கொச்சுவேலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதை மாற்றம்: பரௌணியிலிருந்து எா்ணாகுளத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி வரும் ராப்தி சாகா் விரைவு ரயில் கோண்டா வழியாக அல்லாமல் மன்காபூா், அயோத்யா, அயோத்யா கான்ட், பரபங்கி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

