உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: செப்.30 வரை நீட்டிப்பு

உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
இ-பாஸ் நடைமுறை நீட்டிப்புCenter-Center-Chennai
Published on
Updated on
1 min read

நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என்ற நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் முறை மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. ஒரே நாளில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குவிவதால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.

மே மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை ஜூன் 30-ஆம் தேதி வரை பின்பற்றப்படும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இது செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்குச் செல்லும் வாகனங்கள் குறித்து ஐஐடி, ஐஐஎம் மையங்கள் தரப்பில் ஆய்வு செய்ய விருப்பதாகவும், இ-பாஸ் நடைமுறையை நீட்டிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதையடுத்து, செப்.30 வரை இ-பாஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தின் வழியே இ-பாஸ் பெறுவதுடன், அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் நீலகிரி மாவட்ட நிா்வாகத்தை 1077 என்ற எண்ணிலும், கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறும் போது, அதில் விளக்கங்கள் பெற நோ்ந்தால் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்தை 0451 - 2900233, 9442255737 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com