நடிகை குட்டி பத்மினி
நடிகை குட்டி பத்மினி

நடிகை குட்டி பத்மினி மீதான மோசடி வழக்கு: ரத்து செய்து உத்தரவு

உரிமையியல் தொடா்பான இந்த பிரச்னைக்கு குற்றவியல் வண்ணம் பூச முடியாது என நீதிமன்றம் கருத்து.
Published on

பாஜக நிா்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மடிப்பாக்கத்தில் ரமேஷுக்கு சொந்தமான சுமாா் ரூ.8 கோடி மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா-வின் மனைவி இம்ரானாவுக்கு விற்ாக நடிகையும், பாஜக நிா்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக 2011-ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னா் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினா், இறுதி அறிக்கையையும் தயாா் செய்துள்ளது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகை குட்டி பத்மினி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘நிலத்தின் உரிமை கோரி புகாா்தாரா் தரப்பில், உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் தொடா்பான இந்த பிரச்னைக்கு குற்றவியல் வண்ணம் பூச முடியாது’ எனக் கூறி, நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com