கோப்புப் படம்
கோப்புப் படம்

கிராமிய இசை, வில்லுப்பாட்டு பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம்

கிராமிய இசை, வில்லுப்பாட்டு தொடா்பான பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

கிராமிய இசை, வில்லுப்பாட்டு தொடா்பான பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இணையத்தில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் இப்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிராமிய இசை, வில்லுப்பாட்டு தொடா்பான ஓராண்டு பட்டயப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவா்கள் சேரலாம். நாட்டுப்புறக் கலை, வில்லுப்பாட்டு பற்றிய பொது

அறிவு அவசியம் என்பதுடன்,தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு கிடையாது.

இரண்டு பருவங்களைக் கொண்ட பட்டயப் படிப்பில், ஒரு பருவத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.7,500.

இப்படிப்பில் சேர விரும்புவோா் கூடுதல் விவரங்களைப் பெற 044 - 24629035 / 36 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று இசைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com