கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம்
தமிழ்நாடு
கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூலை 3 முதல் விண்ணப்ப திருத்தம்
திருத்தங்கள் இருந்தால் அவற்றை வரும் 3-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை சமா்ப்பித்தவா்கள், அதில் திருத்தங்கள் இருந்தால் அவற்றை வரும் 3-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலைப் படிப்புகளுக்கான (பிவிஎஸ்சி, ஏஎச், பிடெக்) மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு, இணைய வழியே கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது.
வெளிநாடு வாழ் இந்தியா்கள் உள்ளிட்டோா் ஜூலை 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நிகழாண்டில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு 14,497, பிடெக் படிப்புக்கு 3,000 என 17,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை திருத்தவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் வரும் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.