12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: முக்கிய அறிவுறுத்தல்கள்

இன்று 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதனை 7.25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: முக்கிய அறிவுறுத்தல்கள்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 7.25 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் நடத்தும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இன்று முதல் நாள் மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: முக்கிய அறிவுறுத்தல்கள்
நாக்பூர் சாலையோர கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்! வைரலாகும் விடியோ

தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தடுக்க மாணவர்கள் தேர்வறைகளுக்கு முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் கையில், நுழைவுச்சீட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலா் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது.

அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தோ்வு எண், பெயா் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது.

மாணவா் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபாா்த்து மாணவா்கள் கையொப்பமிட்டால் போதும்.

மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 7.25 லட்சம் மாணவர்கள் இன்று பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.

கண்காணிப்பாளர்களாக 43 ஆயிரம் பேரும், பறக்கும் படையில் 60 ஆயிரம் பேரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவிருக்கிறார்கள். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதியும் தொடங்கவிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com