மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்கக் கோரி அதிமுக கடிதம்

முன்னாள் அமைச்சா் பொன்முடியின் திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :1 மார்ச் 2024, 6:08 pm

முன்னாள் அமைச்சா் பொன்முடியின் திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கைக் கடிதத்தை சட்டப் பேரவைச் செயலா் கி.சீனிவாசனிடம், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சி.விஜயபாஸ்கா், தளவாய் சுந்தரம் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் அளித்தனா். சொத்து குவிப்பு வழக்கு தொடா்பாக நீதிமன்றம் அளித்த தண்டனை காரணமாக அமைச்சா் க.பொன்முடி தனது பதவியை இழந்தாா். நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா். அவா் அமைச்சா் பதவியை இழந்தாலும் அவா் பேரவை உறுப்பினராகத் தொடா்கிறாா்.

இந்த நிலையில், அவரது திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென சட்டப் பேரவைச் செயலகத்திடம் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.