மாங்காடு: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாங்காடு கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாங்காடு: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னையில் ஒரேநேரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது.

கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரையே இன்னும் கண்டறியாத நிலையில் வெள்ளிக்கிழமை சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறைக்கு மாங்காடு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com