சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது

மாரடைப்பால் மரணமடைந்தன சாந்தனின் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது
சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, அண்மையில் விடுதலையான சாந்தன் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது உடல் இலங்கைக் கொண்டு செல்லப்பட்டது.

விமானம் மூலம், இன்று அதிகாலை 2.30 மணிக்கு சாந்தன் உடல் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது
நாக்பூர் சாலையோர கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்! வைரலாகும் விடியோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் சாந்தன். சிறையிலிருந்து விடுதலையான நிலையில், உடல்நிலை பாதிப்புக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், பிப் 28ம் தேதி காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

சாந்தனுடைய கடைசி விருப்பம் அவரது தாயைப் பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், இலங்கை திரும்ப முடியாததால், அது நிறைவேறாமலேயே அவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று இரவு 11 மணியளவில் அவரது உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இந்திய தூதரகத்தின் மூலம், இலங்கை கொண்டு செல்ல அனுமதி கொடுத்தது.

இதனை அடுத்து இலங்கை தூதரகம் தன்னுடைய அனுமதியை தராமல் சுமார் ஒன்றரை மணி நேரம் சரக்கு தளவாளம் வெளிப்பகுதியில் சாந்தன் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை தூதரகம் அனுமதி அளித்த பிறகு சாந்தன் அவர்களின் உடல் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கை கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, சாந்தனின் உடலுக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இலங்கையில் சாந்தன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com