பிரதமர் மோடி வாக்குறுதிகளை வெளிப்படையாகக் கூற வேண்டும்: நாராயணசாமி

ஒரு பிரதமர் எந்த அளவிற்கு பொய் சொல்ல வேண்டுமோ அந்த அளவை மீறி தற்போது பொய் சொல்லி வருகிறார்.
பிரதமர் மோடி வாக்குறுதிகளை வெளிப்படையாகக் கூற வேண்டும்: நாராயணசாமி
Published on
Updated on
2 min read

கடந்த 100 ஆண்டுகள் முன்பு கூறிய வாக்குறுதிகளை, எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் கூற வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,,

ஒரு பிரதமர் எந்த அளவிற்குப் பொய் சொல்ல வேண்டுமோ அந்த அளவை மீறி தற்போது பொய் சொல்லி வருகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பிரதமர் தமிழகத்தில் புறக்கணித்துள்ளார். குடும்ப அரசியல் நடக்கிறது என்று வெளிப்படையாக பிரதமர் விமர்சித்து வருகிறார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதியில் வரலாறு காணாத மழை பெய்ததால் மக்கள் அவதிப்பட்டார்கள். மாநில அரசு சார்பாக அமைச்சர்கள் அதிகாரிகள் ஒன்றாக செயல்பட்டு நிவாரண பணிகள் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள அரசு, இந்த பகுதி மக்களை புறக்கணித்தது, வெள்ளம் மற்றும் பேரிடர் ஏற்பட்டால் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தும் பிரதமர் அதனைச் செவிசாய்க்கவில்லை.

தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பாக நிறையத் திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்குச் சென்ற பிரதமர், மக்களை சந்திக்கவில்லை. தொடர்ந்து தமிழக மக்களைப் புறக்கணித்து, நிவாரணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறார். வாக்குறுதிகளைப் பிரதமர் வெளிப்படையாகப் பட்டியல் போட்டுக் கூற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை, எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் கூற வேண்டும்.

கருப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியிலிருந்து மீட்டு, பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியர்கள் வங்கிக் கணக்கில் 15 ஆயிரம் செலுத்தப்படும் என்று கூறினார். அதனை நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளது, வேலையில்லா திண்டாட்டம், மக்கள் கையில் பணம் இல்லை, சிறிய குறுகிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது, மின்சாரம் கட்டணம் உயர்ந்துள்ளது, மேலும் எரிவாயு மற்றும் சமையல் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளது.

ஆளும் கட்சியை மற்றும் காங்கிரஸ் கட்சியினரை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து கொண்டிருக்கிறார். பிரதமராக தகுதி இல்லாதவர் மோடி எனக் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மதுரையில் திட்டமிடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது, ஐந்தாண்டுகள் ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய பின்பு, தற்போது தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர், ஆனால் எந்த வேலையும் நடைபெறவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் இதே நிலைதான், தமிழகம் போல புதுச்சேரி மாநிலத்திலும் வாக்குறுதியை அள்ளி வீசினார் ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. இன்று புதுச்சேரியில் சாராய ஆறுதான் ஓடிக்கொண்டிருக்கிறது, சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் உள்ளது, மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை தற்போது மோடி செய்ததாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.

மதத்தின் பெயரால் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவாக உருவாகி வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரதமர் வரும் வேளையில் கடைகளை முடியும் கோயில் உள்ளே பக்தர்கள் யாரையும் அனுமதிக்காதது மிகவும் தரக்குறைவான செயல். பல பிரதமர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர், ஆனால் இது போன்ற எந்த வித செயலும் செய்யவில்லை. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், பாரத ஜனதா கட்சியை வீட்டிற்கு அனுப்பப்படும்.

பாஜகவிடம் கூட்டணி சேருவதற்கு ஒரு கட்சி கூட சேரவில்லை, இந்தியக் கூட்டணியிடம் 28 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளது. 2024 தேர்தலில் 400 சீட்டுகள் பாஜக வெற்றி பெறுவோம் என்று பிரதமர் கூறுவது தில்லுமுல்லு அரசியல்.

வாக்குப் பதிவு செய்யும் இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற பாஜக மற்றும் மோடி முயற்சிக்கிறார். அமெரிக்காவில் இன்று வரை வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் வாக்குச் சீட்டு முறையே கொண்டு வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com