ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'நீங்கள் நலமா' திட்டம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

'நீங்கள் நலமா' திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

News image
நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்
Updated On :6 மார்ச் 2024, 7:04 am

DIN

சென்னை: தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கான நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

தமிழக அரசால் தொடக்கப்பட்டிருக்கும் நீங்கள் நலமா எனற் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களை நோக்கி இனி அரசு வரும், மக்களின் நலனை அறிய அரசு காது கொடுக்கும். இது குடும்ப ஆட்சிதான்.. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் தூக்கி விடும் ஆட்சி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் முன்னேறுவதற்கான ஆட்சி. மக்களின் கைகளில் மனுக்களை காண முடியவில்லை, மாறாக அவர்களது முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன்.

தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். திட்டத்தை அறிவிப்பதோடு கடமை முடிந்துவிடுவதில்லை. அது எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற்றுப்பட்டு வருகிறதா என்பதுதான் முக்கியம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.