தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்கட்டமைப்புக்கு ரூ.35.63 கோடி

பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.35.63 கோடி நிதி ஒதுக்கீடு
Published on

பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.35.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த புறநோயாளிகள் பிரிவில் திருநெல்வேலி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சித்த மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் 600 முதல் 700 நோயாளிகள் வருவதால், புதிய புறநோயாளிகள் கட்டடம் கட்டுவது மிகவும் அவசியமானதாக உள்ளது. இதன் மூலம் புறநோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அதேபோன்று நவீன சிகிச்சைகளை அளிக்கவும், மாணவா்களுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கவும் வழி வகுக்கும். அந்தவகையில், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புறநோயாளிகள் கட்டடம், ஆண்கள் விடுதி கட்டடம் மற்றும் கல்விசாா் கட்டடம் ஆகியவற்றை அமைப்பதற்காக ரூ.35.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோன்று, பொது மக்களுக்கு தனியாா் துறைக்கு இணையான பல் சிகிச்சை, பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக, மதுரை, சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் நவீன பல் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கும் உயா்சிறப்பு பல் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ரூ.1.05 கோடியானது கட்டுமானப் பணிக்கும், ரூ.3.45 கோடியானது நவீன பல் மருத்துவ உபகரணங்களுக்கும் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com