பேருந்து டிக்கெட்டுகளை யார் திருடுவார்கள்?

பேருந்து டிக்கெட்டுகளை யார் திருடுவார்கள்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
பேருந்து டிக்கெட்டுகளை யார் திருடுவார்கள்?
Published on
Updated on
1 min read

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் மற்றும் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் மீண்டும் மீண்டும் திருடப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

டிக்கெட்டுகள் மற்றும் டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்தை தொலைத்ததற்காக பேருந்து நடத்துனரிடம் இருந்து அதற்குரிய தொகையை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக பதியப்பட்ட வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், பேருந்து டிக்கெட்டுகளை யார் திருடுவார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

இந்த விவகாரம், மிகவும் தந்திரமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இதுபோல டிக்கெட் மற்றும் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் திருடுபோவது நடப்பதாக வழக்குகள் வருகிறது. ஆனால், யாரும் பேருந்து டிக்கெட்டுகளை ஏன் திருடுகிறார்கள் என்பதற்கான காரணங்கள் மட்டும் தெளிவுபடுத்தப்படவில்லை என்று நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் எஸ். விநாயகம் என்ற ஊழியர், விழுப்புரம் மண்டலத்தில் நடத்துநரர்க பணியாற்றி வருகிறார். இந்த மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் செந்தில்நாதன், தொழில் தீர்ப்பாய சட்டம் 12(3)ன்படி, இழந்த டிக்கெட் மற்றும் கருவிகளுக்கான இழப்பீடுகளை ஊழியர்களிடமிருந்து பெறக்கூடாது என்று சொல்கிறது, எனவே, ஊழியருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சட்டத்துக்கு விரோதமானது என்றார்.

அதாவது, தொலைந்த டிக்கெட்டுகளின் மதிப்பை திரும்பப் பெறக்கூடாது, தொலைந்த டிக்கெட்டுகளை அச்சடிக்க ஆன செலவை மட்டுமே மீட்க வேண்டும், ஆனால், இந்த விவகாரத்தில், மனுதாரர் கவனக்குறைவாக இருந்ததால், பொருள்கள் தொலைந்திருந்தால், அவரிடமிருந்து இழப்புத் தொகையைப் பெறலாம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com