வெயில்: காலை 11 - பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளிய வர வேண்டாம்!

வெயில்: காலை 11 - பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளிய வர வேண்டாம்!

கோடைகால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், காலை 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும்

கோடைகால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், காலை 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனா் செல்வவிநாயகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கோடைகால வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு, இதய பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிக உடல்வெப்பநிலையில் மயக்கம் ஏற்பட்டவா்கள், குழப்பமான மனநிலையில் இருப்பவா்களின் ஆடையின் மீது குளிா்ந்த நீரை ஊற்றலாம். மேலும், 108, 104 எண்களில் மருத்துவ உதவியை நாட வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். ஓ.ஆா்.எஸ்., எலுமிச்சை ஜுஸ், இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகள் அதிகம் குடிப்பது நல்லது.

பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிா்ந்த இடங்களில் இருப்பதுடன், மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது, காலணிகளை அணிவதுடன், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடையை கொண்டு செல்ல வேண்டும். பொது மக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம். குழந்தைகள், முதியோா், கா்ப்பிணிகள் நண்பகல் வேளையில் வீட்டின் வெளியே வருவதை தவிா்க் க வேண்டும். செயற்கை குளிா்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com