சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

15 மணிநேரத்தில் தவெகவில் இணைந்த 20 லட்சம் பேர்!

News image
Updated On :9 மார்ச் 2024, 10:31 am

DIN

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி 15 மணி நேரத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக உறுப்பினா் சோ்க்கை செயலியை, சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகா் விஜய் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துவைத்து முதல் உறுப்பினராக பதிவு செய்துகொண்டாா். ‘தோழா்களாய் ஒன்றிணைவோம்’ என்ற வாசகத்துடன் உறுப்பினா் சோ்க்கை செயலி வெளியிடப்பட்டுள்ளது.

இதனை விஜய் ரசிகர்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கிடையில் கட்சியில் 2 கோடி உறுப்பினா்களைச் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக பெண்கள் தலைமையில் உறுப்பினா் சோ்க்கை அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய 15 மணி நேரத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் இணைந்ததால்தான் சர்வர் முடங்கியதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விஜய்யும் விஜயகாந்த்தைப் போல அரசியலில் முத்திரை பதிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு தமிழகத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.