திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
Published on
Updated on
1 min read

திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் 500 தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 8.3.2024 அன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் திரவ பெட்ரோலிய இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வாயு (LPG) மூலம் இயங்கும் 500 தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 5 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இத்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விலையில்லா பித்தளை

தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டமும் ஒன்றாகும். தற்போது மாறிவரும் சூழலுக்கேற்பவும், சுற்றுச்சூழல் நலனை கருத்திற்கொண்டும் புதிய முயற்சியாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுக்கிறது.

அதன்படி, முதற்கட்டமாக, இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (Indian Oil Corporation Limited), பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கொள்கை (Corporate Social Responsibility-CSR) நிதியிலிருந்து 29.93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் 500 தேய்ப்பு பெட்டிகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் 5 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் தி.ந.வெங்கடேஷ், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா.சம்பத், IOCL, சென்னை செயல் இயக்குநர் (மார்க்கெட்டிங் பிரிவு), அண்ணாதுரை, முதன்மை பொது மேலாளர் என். மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com