புதுச்சேரி சிறுமி கொலை: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி

சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன் தற்கொலை முயற்சி..
புதுச்சேரி சிறுமி கொலை: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் திங்கள்கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

முத்தியால்பேட்டை போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சோலை நகரை சோ்ந்த 6 பேருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.இதில் 5 போ் சிறுவா்கள் என்பதும், அனைவரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது.

புதுச்சேரி சிறுமி கொலை: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி
மார்ச் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

இந்த வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 56 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதேயான கருணாஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரிய வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சக கைதி கருணாஸ் கூச்சலிட்ட நிலையில், சிறைக் காவலர்கள் விவேகனந்தனை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com