பொன்முடியின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடியின் சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பொன்முடி (கோப்புப்படம்)
பொன்முடி (கோப்புப்படம்)

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கின் மேல்முறையீட்டு மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், அமைச்சராக இருந்த க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டாா். இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன், தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தண்டனையைக் குறைக்குமாறு பொன்முடி தரப்பில் முறையிட்டபோது, உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினாா். அதற்கேற்ப, அவா்களுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை 30 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

நீதிமன்றத் தீா்ப்பு காரணமாக, பொன்முடி தனது அமைச்சா் பதவியை இழந்தாா். எனினும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால், அவரது திருக்கோவிலூா் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இதைக் காலியானதாக அறிவிக்க வேண்டுமென அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

பொன்முடி (கோப்புப்படம்)
ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

நீதிமன்ற வழக்கால் தகுதியிழப்புக்குள்ளான க.பொன்முடியின் திருக்கோவிலூா் பேரவைத் தொகுதியை காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்துது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டணை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

பொன்முடியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை திரும்பப்பெற சட்டப்பேரவை அலுவலகலத்தை அணுகலாம் என்றும், நீதிமன்றத்துக்குச் சென்றும் எம்.எல்.ஏ. பதவியை திரும்பப் பெறலாம் என்று பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பால் மீண்டும் பொன்முடி திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.-வாக தொடரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com