பரந்தூர் விமான நிலையம்: புதிய அறிவிப்பு வெளியீடு!

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க, நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு முன்னதாக தெரிவித்தது.

கோப்புப்படம்
பொக்ரானில் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சி: பிரதமர் மோடி பார்வையிடுகிறார்

இந்த நிலையில், காஞ்சிபுரம், சிறுவள்ளூரில் 1.75 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com