கோடை வெய்யிலை சமாளிக்க கூல்ட்ரிங்ஸ் குடிக்கும் குரங்கு!

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக வரும் பக்தர்களிடமிருந்து வாங்கி தாகத்தைத் தனித்துக்கொள்ளும் குரங்கு..
வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கோடை வெயிலைத் தாங்க முடியாமல் கூல்ட்ரிங்க்ஸ், பாட்டில் நீர், பழங்கள் உண்ணும் குரங்குகளின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை செல்சியஸை தாண்டி உள்ளது. இதனால் மக்கள் இளநீர், தர்பூசணி, மோர், தண்ணீரை தேடி செல்கின்றனர். இந்த நிலையில் கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்திற்கு வனப்பகுதியிலிருந்து வரும் குரங்குகள் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடியும், உணவுக்காக சுற்றி வருகிறது.

இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கையில் கூல்டிரிங்ஸ், குடிநீர் பாட்டில்களை எடுத்து வருகின்றனர். அப்படி எடுத்து வந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டில் ஒன்றைப் பக்தரிடம் இருந்து பெற்ற குரங்கு ஒன்று அதனை லாபகமாக எடுத்துச் சென்று மரத்தின் மேல் அமர்ந்து குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டது.

இதே போல் மற்றொரு குரங்கு அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தானாகக் குழாயை அழுத்தி நீர் அருந்துவதோடு, பாட்டிலில் இருந்த குடிநீரைக் குடித்தது. மற்றொருபுறம் வெள்ளிங்கிரி மலை அடிவார கோவில்களில் பூஜைக்காக எடுத்து வரப்படும் பழங்கள் அங்குள்ள குரங்குகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com