தவறு செய்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன்: குஷ்பு

தவறு செய்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன்: குஷ்பு

உண்மை பேசுவதற்கு தைரியம் வேண்டும். அது திமுகவுக்கு இல்லை என விமர்சித்தார் குஷ்பு.

நான் தவறு செய்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என்றும் பயந்து ஓடிவிடமாட்டேன் எனவும் மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள நடிகை குஷ்பு,

அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை இன்று அனைவரும் என்னைப்பற்றி பேசி வருகின்றனர். விடியோ வெளியிட்டு வருகின்றனர். என் பழைய பதிவுகளை திரித்து மறுபதிவு செய்து வருகின்றனர். நான் என் பழைய பதிவுகளை நீக்கவில்லை. எனக்கு ஐடி விங் தேவையில்லை. நேருக்கு நேர் பேசக்கூடிய தைரியம் எனக்கு உள்ளது.

திமுகவில் நான் மதிப்பு வைத்திருந்த அமைச்சர் உள்பட பலர் என்னைப்பற்றி பேசுகின்றனர். ஏன் அவர்களுக்கு அத்தனை பயம்? மக்களை திசை திருப்பும் முயற்சிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். எவ்வாறு மக்களை அவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்பது மக்களுக்கு தெரியும்.

டாஸ்மாஸ் எண்ணிக்கையை எப்போது குறைப்பீர்கள். ரூ. 2000 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அதைப்பற்றி பேச யாரும் தயாராக இல்லை. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திமுக கூறலாம்.

தவறு செய்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன்: குஷ்பு
அண்ட புளுகு, ஆகாசப் புளுகு போல இது மோடி புளுகு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதைப்பற்றி பேசுங்கள் பார்ப்போம். அதைப்பற்றி பேச திமுகவுக்கு தைரியம் இல்லை. திமுக தலைவருக்கும் தைரியம் இல்லை.

சுற்றிவளைத்து பேசும் பழக்கம் எனக்கு இல்லை. தமிழ்நாட்டு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பதில், டாஸ்மாக் கடைகளைக் குறைத்தால் , பல ஆயிரம் ரூபாய்களை சேமித்து, அவர்கள் நன்முறையில் குடும்பத்தை நடத்தக்கூடும் என்பதையே நான் குறிப்பிட்டேன். ஆனால், பெண்களுக்கு எதிராக பேசியதாக என் கருத்தை திரித்தனர்.

பெண்களை அவதூறாக பேசுவது, தவறான விஷயங்களைப் பரப்புவதி திமுகவின் டிஎன்ஏ. இதை நான் திமுகவில் இருக்கும்போதும் பார்த்துள்ளேன். வெளியே வந்த பிறகும் பார்க்கிறேன்.

நான் தவறு செய்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன். பயந்து ஓடமாட்டேன். அரசியல் நாகரிகம், மேடை நாகரிகம் முன்வைத்து பேச வேண்டும் என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சொல்லிக் கொடுத்த விஷயங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவரை அவமானப்படுத்தும் வகையில் நடக்கவும் மாட்டேன்.

திமுகவின் புதிய தலைவருக்கு கீழ் உள்ளவர்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. உண்மை பேசுவதற்கு தைரியம் வேண்டும். அது திமுகவுக்கு இல்லை எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com