பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி?

பாமகவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்.
பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி?

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியை பாட்டாளி மக்கள் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் என்ற சூழலில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

இந்த முறை பாஜக, அதிமுக தனித்தனியே தேர்தலை சந்திப்பதால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இரண்டு கூட்டணியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்க பாமக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு கட்சிகளிடமும் 10 தொகுதிகளை பாமக கேட்டிருந்த நிலையில், பாஜக 8 தொகுதிகளும், அதிமுக 7 தொகுதிகளும் கொடுக்க முன்வந்துள்ளது.

மேலும், மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து பாமகவும் வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கேட்க பாமக கணக்கிட்டுள்ளது.

பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி?
திருவள்ளூர், திருச்சி, கரூர், ஆரணி - காங்கிரஸுக்கு இல்லை?

வட தமிழகத்தில் பலமாகவுள்ள அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பாமக நிறுவனர் ராமதாஸ் விருப்பப்பட்டாலும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி ராமதாஸ் மும்முரம் காட்டி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அமைச்சர் விகே சிங் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அன்புமணியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஓரிரு நாளில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாமக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com