

பெண் பத்திரிகையாளா்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த ஒருமாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
எம்.பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாதம் சிறையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதனை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த ஒருமாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.
2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளா்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை எஸ்.வி.சேகா் தனது முகநூல் பக்கத்தில் பகிா்ந்திருந்தாா். இதைத்தொடா்ந்து அவா்மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பத்திரிகையாளா்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளா் மிதாா் மொய்தின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகா் எஸ்.வி.சேகா் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நடிகா் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அபராதத் தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகா் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.