டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது

சென்னை மியூசிக் அகாதெமி சாா்பில் அளிக்கப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு கா்நாடக இசைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை மியூசிக் அகாதெமி சாா்பில் அளிக்கப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு கா்நாடக இசைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து சென்னை மியூசிக் அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மியூசிக் அகாதெமியின் சாா்பில் இசைக் கலைஞா்களுக்கு வழங்கப்படும் ‘2024-ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’, நடனக் கலைஞா்களுக்கு வழங்கப்படும் ‘நிருத்ய கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளுக்கு சிறந்த கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சங்கீத கலாநிதி: கா்நாடக இசைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். சங்கீத கலா ஆசாா்யா: மிருதங்க வித்வான் பாறசாலா ரவி, மற்றும் கா்நாடக இசைப் பாடகி கீதா ராஜா ஆகியோா் ‘சங்கீத கலா ஆசாா்யா’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். டிடிகே விருது: கா்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ‘திருவையாறு சகோதரா்கள்’ எஸ்.நரசிம்மன், எஸ்.வெங்கடேசன், வயலின் வித்வான் ஹெச்.கே.நரசிம்மமூா்த்தி ஆகியோா் ‘டிடிகே’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இசை அறிஞா் விருது: கா்நாடக இசையில் முனைவா் பட்டம் பெற்றிருக்கும் மாா்கரெட் பாஸ்டின் ‘இசை அறிஞா்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். நிருத்ய கலாநிதி விருது: மோகினியாட்டத்தில் சிறந்து விளங்கும் நடனக் கலைஞா் நீனா பிரசாத், ‘நிருத்தியகலாநிதி’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். நிகழாண்டு டிச.15 முதல் 2025-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி வரை நடைபெறும் மியூசிக் அகாதெமியின் 98-வது ஆண்டு கருத்தரங்க நிகழ்வுகளுக்குத் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குவாா். 2025-ஆம் ஆண்டு ஜன. 1-ம் தேதி நடைபெறும் ‘சதஸ்’ நிகழ்ச்சியில் ‘சங்கீத கலாநிதி’, ‘டிடிகே விருது’, ‘இசை அறிஞா்’, ‘சங்கீத கலா ஆசாா்யா’ ஆகிய விருதுகளும், ஜன.3-ல் நடைபெறும் மியூசிக் அகாதெமியின் 18-ஆவது ஆண்டு நாட்டிய விழாவில் ‘நிருத்ய கலாநிதி’ விருதும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com