
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி, தூத்துக்குடியில் கனிமொழி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன்,வடசென்னையில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர். பாலு, அரக்கோணத்தில் ஜகத்ரட்சகனும், வேலூரில் கதிர் ஆனந்த், திருவண்ணாமலையில் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தஞ்சையில் முரசொலி, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன், தென்காசியில் ராணியும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
தருமபுரியில் ஆ. மணி, ஆரணியில் தரணி வேந்தன், கள்ளக்குறிச்சியில் மலையரசன், சேலத்தில் செல்வகணபதி, ஈரோட்டில் கே.இ. பிராகாஷ், கோவயில் கணபதி ராஜ் குமார், பொள்ளாச்சியில் ஈஸ்வரசாமி, பெரம்பலூரில் அருண் நேரு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காஞ்சீபுரத்தில் க.செல்வம், நீலகிரியில் ஆ.ராசா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இம்முறை வெளியான திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 11 புதியவர்கள், 3 பெண்கள், 2 முனைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மூத்த தலைவர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி, தஞ்சாவூர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தருமபுரி செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.