
கும்பகோணம் அருகே வியாழக்கிழமை காலை தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட அணைக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாண்டியன் தலைமையில் காவல் துறையினர் வியாழக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சுவாமிமலையில் இருந்து காரில் 9 ஐம்பொன் சிலைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படுவதும், ஆந்திர மாநிலம் வாடப்பள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுவதும் தெரிய வந்தது.
இதையடுத்து 9 சிலைகளையும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து திருவிடைமருதூர் வட்ட அலுவலகம் வட்டாட்சியர் பாக்கியராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.