அதிமுக 33 தொகுதிகளில் போட்டி: கூட்டணிக்கு 7 தொகுதிகள்!

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி அறிவிப்பு
அதிமுக 33 தொகுதிகளில் போட்டி: கூட்டணிக்கு 7 தொகுதிகள்!

மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

அதிமுக வேட்பாளர்கள்

வடசென்னை - ராயபுரம் மனோகரன்

தென் சென்னை - ஜெயவர்தன்

காஞ்சிபுரம் - ராஜசேகர்

அரக்கோணம் - விஜயன்

ஆரணி - கஜேந்திரன்

கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்

விழுப்புரம் - பாக்கியராஜ்

சேலம் - விக்னேஷ்

நாமக்கல் - தமிழ்மணி

ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

கரூர் - தங்கவேல்

சிதம்பரம் - சந்திரஹாசன்

மதுரை - சரவணன்

தேனி - நாராயணசாமி

நாகை - சுர்ஜித் சங்கர்

இராமநாதபுரம் - ஜெயபெருமாள்

ஸ்ரீபெரும்புதுார் – பிரேம்குமார்

வேலுார் – பசுபதி

தர்மபுரி – அசோகன்

திருவண்ணாமலை – கலியபெருமாள்

கோவை – சிங்கை ராமச்சந்திரன்

திருச்சி - கருப்பையா

பொள்ளாச்சி – அப்புசாமி கார்த்திகேயன்

நீலகிரி – யோகேஷ் தமிழ்ச்செல்வன்

கள்ளக்குறிச்சி – குமரகுரு

புதுக்கோட்டை

பெரம்பலுார் சந்திரமோகன்

மயிலாடுதுறை – பாபு

திருப்பூர் – அருணாசலம்

திருச்சி – கருப்பையா

சிவகங்கை – சேவியர் தாமஸ்

துாத்துக்குடி – சிவசாமி வேலுமணி

நெல்லை – சிம்லா முத்துச்சோழன்

கன்னியாகுமரி – பசுலியான் நாசரேத்

தேமுதிகவுக்கு ருவள்ளூா் (தனி), மத்திய சென்னை, கடலூா், தஞ்சாவூா், விருதுநகா் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி), எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com