திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு!

‘பா.ஜ.க. எனும் பாசிச சநாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட திமுகவுக்கு ஆதரவு’
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சநாதானத்தை வீழ்த்தி, சமூக நீதி காக்க திமுகவுக்கு ஆதரவளிப்பதாக கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்
ரூ. 50,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: புதிய உச்சம்

கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பா.ஜ.க. எனும் பாசிச சநாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.

மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா' கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில், கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.மு.க.வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் விரோத சநாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிடமுன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com