புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) இன்று பதவியேற்றுக்கொண்டார்.

புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அவரது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.

இதையடுத்து ஜார்க்கண்டர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) பதவியேற்றார்.

அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com