
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை சாம்பல் புதனுடன் தொடங்கியது . இதிலிருந்து எழு வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிககளில் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.
ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா ' என்று முழுங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
இதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் நல் மேய்ப்பர் தேவாலய சபை மக்கள் திரளானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர்.
சேகர தலைவர் காலேப் சாமுவேல், சபை ஊழியர் ஸ்டீபன், சேகர பொருளாளர் இயேசு ராஜா மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்