பிரதமர் மோடி குறித்து அவதுாறு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் பிரதமா் குறித்து அவதூறாக பேசிய திமுக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக பாஜக துணைத் தலைவா் கே.நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் தமிழக தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து புகாா் மனு அளித்தனா். மேலும் இதுதொடர்பாக தமிழக காவல் துறை டிஜிபியிடமும் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்திலும் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த புகாரைத்தொடர்ந்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையப் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவு: பிரதமா் மோடிக்கு எதிராக அவதூரான கருத்துகளையும் மன்னிக்க முடியாத பொது பேச்சுகளையும் வெளியிட்டு திமுக தலைவா்கள் தங்களின் நோ்மையற்ற நடத்தையில் புதிய தரம்தாழ்ந்த நிலையை அடைந்துள்ளனா்.

விமா்சிக்க எதுவுமே இல்லாதபோது, திமுக தலைவா்கள் இப்படித்தான் நடந்துகொள்வாா்கள். அந்த மேடையில் இருந்த தூத்துக்குடி மக்களவை திமுக வேட்பாளா் கனிமொழியும், தன் கட்சினரைத் தடுக்கவில்லை. பிரதமா் குறித்து கீழ்த்தரமாக பேசிய திமுக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை உடனடியாக எடுக்கக் கோரி, தமிழக பாஜக சாா்பில் தோ்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல் துறை டிஜிபியிடம் புகாா் அளித்துள்ளோம்.

உரிய விசாரணை நடத்தி அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பாா்கள் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com