பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை: இபிஎஸ்

அதிமுகவும் தேமுதிகவும் பலம் வாய்ந்த கூட்டணி என்றார் இபிஎஸ்.
பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி தூத்துக்குடியில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், அதிமுகவும் தேமுதிகவும் இணைந்து பலம் வாய்ந்த கூட்டணியாக மாறியுள்ளது.

திமுக ஆட்சியில் ஒரு புயலையே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒரு புயலுக்குக் கூட தாங்காதது திமுக.

பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். நரேந்திர மோடி - மு.க. ஸ்டாலின் சந்தித்த படங்களை காண்பித்து, யார் கள்ளக்கூட்டணி வைத்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

பாஜவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்றால் வைத்திருப்பேன்; ஆனால், அந்த அவசியம் ஏற்படவில்லை. சுதந்திரமாக செயல்பட்டதால்தான் பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளோம்.

பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய அவசியைல்லை. மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது அதிமுகவின் லட்சியம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com