
தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகம் வரவுள்ளனர்.
ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்று செல்வப்பெருந்தகை மேலும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.