மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்

குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வரும் மக்களவைத் தோ்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளா் வைகோ சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில், ‘தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிா்வாகிகளின் பெயா்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தோ்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு புதன்கிழமை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தோ்தல் ஆணையம் தரப்பு வழக்குரைஞா், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தாா். மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பாா் என்றும் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 27 காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று மதிமுகவின் வழக்கறிஞரின் மின் அஞ்சலுக்கு தேர்தல் ஆணையம் இன்று காலை பதிலளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com