தேர்தல் சுவாரஸ்யம்.. ஆறு பன்னீர்செல்வம், 'தெரியாமல்' நடந்த தவறு

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது.
இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்
இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மார்ச் 20ஆம் தேதிமனு தாக்கல் தொடங்கியது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மார்ச்.27ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 1,403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கலில் நடந்த சுவாரஸ்யங்கள்..

சும்மா விளையாட்டுக்கு

அதிமுக தலைவர் செல்லூர் கே. ராஜூ, எப்போது எங்கு பேசினாலுமே அது ஒரு செய்தியாகிவிடும். தலைப்புச் செய்தியாகிறதோ இல்லையோ, அவரது நகைச்சுவைக்காகவே செய்தியாகிவிடும்.

செல்லூர் ராஜு  (கோப்புப் படம்)
செல்லூர் ராஜு (கோப்புப் படம்)
இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்
தேர்தலில் பெண்களின் கை ஓங்குகிறதா?

அதுபோலத்தான், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் பலரும், செல்லூர் ராஜூ உரையாற்றிக் கொண்டிருந்தபோது சப்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த செல்லூர் கே. ராஜூ, நான் பேசுவதைக் கேட்காவிட்டால், எல்லோரும் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று சொன்னார். இதனால், அங்கிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர். விளையாட்டுக்காக சொல்லவில்லை. ஒரு மந்திரவாதியை பார்த்து வரம் வாங்கி வந்திருக்கிறேன் என்று சொன்னதும், சிரிப்பலையை அடங்க வெகு நேரம் ஆனது.

நான்தான் பன்னீர்செல்வம்

ராமநாதபுரத்தில் சுயேச்சையாகக் களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வத்துடன் மேலும் நான்கு ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயருடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை, ஒரு சின்ன மாற்றத்துடன் மற்றொரு பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் எம். பன்னீர்செல்வம். இவர் கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். இவருடன் ராமநாதபுரத்தில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது.

வேட்பு மனுவை மறந்த வேட்பாளர்

தேனி திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன்
தேனி திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம், செய்தியாளர்கள் உங்களது வேட்பு மனுவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்ட போதுதான், அவர் தனது வேட்பு மைனுவை காரிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. உடனடியாக அவரது உதவியாளரை அனுப்பி வேட்பு மனுவை எடுத்து வந்தார். இதனால் சிலர் முனுமுனுக்கவும் சிலர் லேசான புன்முறுவலுடனும் அவருடன் காத்திருந்தனர்.

'தெரியாமல்' நடந்த தவறு

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் அருணாசலம் வந்திருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்எஸ்என். ஆனந்தன், செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்களுடன் அதிமுக தொண்டர்களும் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரி, அனைவரையும் தடுத்து நிறுத்தி, வேட்பாளர் உள்பட அனைவரையும் வெளியேற்றிவிட்டார். பிறகுதான், வேட்பாளர் யார் என்று தெரியாமல் அவரையும் வெளியேற்றிவிட்டது காவல்துறை அதிகாரிக்குத் தெரிய வந்தது. பிறகு தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வேட்பாளரை உள்ளே அனுமதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com