
கோவை: பொள்ளாச்சி அருகே நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 மருத்துவக்0 கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது இதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ஷித்தல் முண்டே வயது (21),ரிஷி கேஸ்ரமேஸ்வர் குட்டே(20)ஆகியோர் இரண்டாம் ஆண்டு படித்துவந்தனர். இந்நிலையில் இரண்டு பேரும் டீ குடிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அரசம்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் பலமாக மோதியதில் சம்பவ இடத்திலே இரண்டு கல்லூரி மாணவர்களும் பலத்த காயம் அடைந்து பலியானார்கள்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம் மீது மோதிய வாகனத்தை நான்கு வழி சாலை அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.