சென்னை: குறையும் நீர்நிலைகள்! பெரும் பற்றாக்குறை ஆபத்து?

சென்னையில் நீர்நிலைகளில் குறையும் தண்ணீரால் பெரும் பற்றாக்குறை ஆபத்து..
புழல் ஏரியின் தற்போதைய நிலை
புழல் ஏரியின் தற்போதைய நிலை

சென்னை: கடும் கோடை வெப்பம் மக்களை கொடுந்துயரத்துக்கு ஆளாக்கும் அதே வேளையில், சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் நீர்மட்டத்தை சுரண்டிப்பார்க்கவும் தவறவில்லை.

கனமழையால், நீர்நிலைகளின் தடுப்புகள் சேதமடைந்து, நீர்த்தேக்கும் அளவு குறைவதும், கடுமையான வெப்பத்தினால், இருக்கும் குறைந்தபட்ச நீரும் ஆவியாவதும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன.

இது குறித்து நீர்வளத் துறையின் (WRD) அதிகாரிகள் கூறுகையில், கோடைகால நீர் தேவையை குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன என்கிறார்கள்.

புழல் ஏரியின் தற்போதைய நிலை
வெளிநாட்டு அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்: தொலைத்தொடர்புத் துறை

நீர்வளத்துறை எடுத்திருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், நமக்குக் கிடைத்திருக்கும் தகவல் என்வென்றால், அதாவது, சென்னை மாநகரிடல் உள்ள ஆறு ஏரிகளிலும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 8.040 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. இது ஒட்டுமொத்த நீர்த்தேக்க அளவான 13.213 டிஎம்சியில் 60.85 சதவீதமாகும். இது கடந்த ஆண்டு இதேக் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு, கடந்த ஆண்டு 75 சதவீதம் நீர் இருப்பு இருந்துள்ளது.

கடந்த டிசம்பரில் வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு கன மழை பெய்ததால், அணைகள் அதிகபட்ச கொள்ளளவை எட்டின. டிசம்பர் 10 அன்று, அவற்றின் மொத்த சேமிப்பு 11.594 டிஎம்சி (கொள்ளளவில் 87.75 சதவீதம்) நீர் நிறைந்திருந்தது. இருப்பினும், கடந்த நான்கு மாதங்களில், கிட்டத்தட்ட 27 சதவீதம் தண்ணீர் குறைந்துவிட்டது.

தண்ணீரா.. அது எங்கே?
தண்ணீரா.. அது எங்கே?

நீர்வளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ​​“நடப்பு நிதியாண்டில் (2023-24) தமிழ்நாடு ஆண்டுக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 12 டி.எம்.சி. தண்ணீரைக் காட்டிலும் இதுவரை வெறும் 2.41 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரத்திடமிருந்து பெற்றுள்ளது. அண்மையில் தமிழகத்தில் பருவமழையின் போது மாநிலத்தின் மழை அளவு அதிகமாக இருந்ததால், ஆந்திரத்திடம் தமிழகத்துக்குத் தற்போதைக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.

ஆனால், தற்போதைய நிலையோ, வீராணம் ஏரியின் நீர் இருப்பு என்றால் அது பூஜ்ஜியத்தை அடைந்துவிட்டது. எப்படியிருந்தாலும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியமானது, புதிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் குடிநீரைப் பெற்று, மாநகரின் தேவையை பூர்த்திசெய்துவிடும் என்று நம்புகிறோம். கூடுதலாக, மீஞ்சூர் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் நெம்மேலி மூலம் கூடுதலாக தண்ணீர் பெற்று, அதனையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி, குடிநீர் பற்றாக்குறையை தடுக்கும் என்று கருதப்படுகிறது.

ஏரியாவா.. ஏரியா?
ஏரியாவா.. ஏரியா?

அதேவேளையில், ஆந்திரப் பிரதேசம் ஏப்ரல் முதல் நான்கு டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிடும் என்று நீர்வளத்துறை எதிர்பார்க்கிறது, இது வரும் நாள்களில் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com