தீப்பெட்டி கிடைத்ததில் மகிழ்ச்சி: துரை வைகோ

திருச்சியில் தீப்பெட்டிச் சின்னத்தை தொண்டர்கள், பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தார்.
துரை வைகோ
துரை வைகோகோப்புப் படம்

மக்களவைத் தேர்தலில் தீப்பெட்டி சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி என மதிமுக பொதுச்செயலாளரும் திருச்சி தொகுதி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்திற்கு பதிலாக தீப்பெட்டி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியுள்ளது.

துரை வைகோ
தொல். திருமாவளவனுக்கு பானை, மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு!

இதனை ஏற்றுக்கொண்ட துரை வைகோ, திருச்சியில் தீப்பெட்டிச் சின்னத்தை தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தீப்பெட்டிச் சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான். மக்களிடம் எளிதாக சின்னத்தை கொண்டு சென்று சேர்க்க முடியும். காங்கிரஸ் கட்சியை முடக்க பாஜக நினைக்கிறது என விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com