இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு
நீலகிரிக்கு கேரளம், கர்நாடகத்திலிருந்து வருவோக்கு இ-பாஸ் கட்டாயம்
நீலகிரிக்கு கேரளம், கர்நாடகத்திலிருந்து வருவோக்கு இ-பாஸ் கட்டாயம்

சென்னை: உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்குவதை நடைமுறைப்படுத்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடைக்கானல், உதகை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்குவதற்கான நெறிமுறைகள் இன்று வெளியாகிறது. அதில், ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி அளிப்பது, உள்ளூர் வாகனங்களுக்கான நெறிமுறைகள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் உதவியோடு இதற்கான சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், சுற்றுலா பயணிகள் தங்களது விவரங்களை பதிவிட்டு இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை மே 7 முதல் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான வழக்குகள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்கள் காணொலி மூலம் ஆஜராகினா். இதையடுத்து உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூா் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அரசு தாக்கல் செய்த அறிக்கையில், உதகைக்கு தினமும் 1,300 வேன்கள் உள்பட 20,000 வாகனங்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை, கொடைக்கானலில் மே 7 முதல் ஜூன் 30 வரை நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்கள் அமல்படுத்த வேண்டும்.

இந்த இ-பாஸ் வழங்கும் முன்பு வாகனங்களில் வருவோரிடம், எந்த மாதிரியான வாகனம்? எத்தனை போ் வருகின்றனா்? ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடா்ந்து தங்குவாா்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். அதேவேளையில், உள்ளூா் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களைக் கொடுக்க வேண்டும். இ - பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து, இ-பாஸ் வழங்குவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com